இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறும் தொடர் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹாரி ப்ரூக் தலைமையிலான இந்த அணியில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார். முன்னதாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த ஆர்ச்சர், தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன் அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
மறுபக்கம் அணியின் நட்சத்திர பேட்டரான பென் டக்கெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பென் டக்கெட் காயத்தை சந்தித்ததன் காரணமாக அவருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பில் சால்டுடன், ஜோஸ் பட்லர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார்.
இது தவிர்த்து ஜேக்கப் பெத்தெல், சாம் கரண் உள்ளிட்டோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், வில் ஜேக்ஸ், டாம் பாண்டன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இந்த அணியில் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் லுக் வுட் ஆகியோருக்கு இந்த பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெதெல், டாம் பேன்டன், ஹாரி புரூக் (கேப்டன்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித
இலங்கை-இங்கிலாந்து அணிகள்
- இங்கிலாந்து அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (டி20 உலகக் கோப்பை), ரெஹான் அகமது, டாம் பான்டன், ஜேக்கப் பெத்தெல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ் (இலங்கை தொடரில் மட்டும்), சாம் கரண், லியாம் டௌசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.
- இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, ஈஷன் மலிங்க.