மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா

மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா

நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அங்கு இருவரும் சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர்.

விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா, வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் படப்பிடிப்புக்காக அவர் அடிக்கடி மும்பை சென்று வர நேரிட்டது. இதனால் அவர் மும்பையில் புதிய வீடு வாங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், மும்பை வீட்டின் புகைப் படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, 'புதிய தொடக்கம்' என்று தெரிவித்துள்ளார். சாம் என்று எழுதப்பட்டுள்ள அந்த வீட்டின் பூஜை அறையை அவர் பகிர்ந் துள்ளார். நடிகை சமந்தா, 'த பேமிலி மேன்' இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.