‘மீலாதுன் நபி’ முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு

முஹம்மது நபியின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்டு ‘மீலாதுன் நபி’ என்ற படம் உருவாகி இருக்கிறது. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது, பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இதைத் தயாரித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட்டார்.
தயாரிப்பாளர் கே.கோதர்ஷா, இயக்குநர் மில்லத் அகமது, இமாம் சதக்கத்துல்லா பாகவி, பாடகர் சம்சுதீன், இமாம் உமர் ரிஸ்வான் ஜமாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் படம், “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் உருவாக்கப்பட்டது. பள்ளி மாணாக்கர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும் பும் ஆர்வலர்கள் அனைவரும் காண வேண்டிய படம். இதன் கதை மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது