அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி; குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு

அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி; குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு

குஜராத் அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உள்பட 26 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து, குஜராத் அமைச்சர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்றைய அறிவிப்பின்படி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாலுர், பிரவின்குமுர் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வஹேலா,குன்வர்ஜி பவாலியா, அருண் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வாஹானி, பிரபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்வி மற்றும் கனுபாய் தேசாய் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காந்தி நகரில் நடந்த விழாவில், கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜேபி நட்டா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் முழுவிபரம்

பூபேந்திர ரஜினிகாந்த் படேல்

திரிகம் பிஜல் சாங்கா

ஸ்வரூப்ஜி சர்தார்ஜி தாக்கூர்

பிரவின்குமார் மாலி

ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல்

பி.சி. பாரண்டா

தர்ஷனா எம் வஹேலா

கந்தரதலால் சிவலால் அம்ருதியா

குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா

ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜா