அதிமுக பொய் சொல்லுது.. உங்களுடன் ஸ்டாலின் வழக்கில்.. உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி! திமுக பளீர் வாதம்

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் பெயர் தடைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிமுக தரப்பு வழக்கறிஞரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். இதற்கு
ஒன்று கூட இல்லை என அதிமுக தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதற்கு பொய் சொல்கிறார்கள் என திமுக எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போது மத்திய அரசின் திட்டங்களுக்கும் சரி தலைவர்கள் பெயர் வைக்கப்படுவது உண்டு. புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என அதிமுக கட்சித் தலைவர்களை அழைக்கும் பெயரில் கூட திட்டம் உள்ளது. இதெல்லாம் அவர்கள் தங்கள் தலைவர்களை அழைக்கும் பெயர்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை எங்களால் தெரிவிக்க முடியும். மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட இப்படி சில சமயம் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அரசின் விளம்பரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் இதில் எங்கும் விதிமுறை மீறல் கிடையாது ஒரு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக பிரதமர் முதல்வர் ஆகியோரது பெயர் மற்றும் படங்களை காலம் காலமாக பயன்படுத்தி தான் வருகிறார்கள் கவர்னர் படங்கள் கூட சில சமயம் இடம் பெற்று இருக்கிறது என வாதம் வைத்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் - உயர் நீதிமன்ற உத்தரவு முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. "உங்களுடன் ஸ்டாலின்" மற்றும் "நலம் காக்கும் ஸ்டாலின்" போன்ற திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார். நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமிற்கு போனால் உங்கள் தேவைகளை உடனடியாக தீர்க்கும்படி எல்லா துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆதார் நம்பர், ரேஷன் கார்ட், மொபைல் நம்பர், பேங்க் பாஸ்புக் இதை மட்டும் கொண்டு வந்தால் போதும்.. இந்த முகாமில் எளிதாக ஒரு ரூபாய் செலவு பண்ணாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும். மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடக்கின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதோடு 15ம் தேதி முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வீடுகளில் வழங்கப்படும். இதற்காக பல தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேரடியாக வீடுகளில் கூட வந்து உங்களிடம் விண்ணப்பங்களை கொடுப்பார்கள்.