காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால்…: ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

காசாவில் மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹமாஸ் அமைப்பு காசாவில் உள்ள மக்களை தொடர்ந்து கொன்று வருவதால், அது ஒப்பந்தம் அல்ல. நாங்கள் உள்ளே சென்று அவர்களை (ஹமாஸ் அமைப்பினர்) கொல்வதை தவிர வேறுவழியில்லை. காசாவில் மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.