ஒரு டிரில்லியன் டாலர் கனவு..! நூலின் சுவாரஸ்யமான தகவல்கள்..!
ONE TRILLION DOLLAR DREAM - BOOK AUTHORED BY THIRUGNANAM - EDITOR, PUNNAGAI

1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்
உ.பி, மகாராஷ்டிரம், மேற்குவங்கம்
ஆகிய 3 மாநிலங்களுக்குப் பிறகு
நான்காவது இடத்தில்
இருந்த தமிழ்நாடு,
தற்போது மகாராஷ்டிரத்துக்கு அடுத்ததாக
இந்தியாவின் இரண்டாவது பெரிய
பொருளாதாரம் ஆகத் திகழ்கிறது.
தற்போது
திராவிட மாடல் முதல்வரின் ஆட்சியில்
11.19 % வளர்ச்சி விகிதத்துடன்
இந்தியாவின் நம்பர் ஒன்
பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக
தமிழ்நாடு திகழ்கிறது.
-----
2021 ஆம் ஆண்டில்
ரூ 20 லட்சம் கோடி ரூபாயாக இருந்த
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை
தற்போது 35 லட்சம் கோடி ரூபாய்
பொருளாதாரம் ஆக உயர்த்தியுள்ளார்
நமது முதல்வர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை,
2030 ஆம் ஆண்டில்
85 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக
உயர்த்த வேண்டும் என்பதே
நமது முதல்வரின் கனவு இலக்கு.
-----
வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில்
கடந்த நான்கரை ஆண்டுகளில்
சுமார் 2 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் எண்ணிக்கையில்
இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக
தமிழ்நாடு உள்ளது.
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்
இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக
தமிழ்நாடு உள்ளது.
மின்னணு உற்பத்தியில்
இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக
தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
பள்ளிக்கல்வியில்
எட்டாம் வகுப்பு வரை
இடைநிற்றலே இல்லாத
ஒரே மாநிலம் தமிழ்நாடு.
உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம்
தேசிய அளவில் 28.8% மட்டுமே உள்ள நிலையில்,
தமிழ்நாட்டில்
இது 51.3 சதவீதமாக உள்ளது.
அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட
இந்திய அரசின்
MAKE IN INDIA திட்டத்தின் குறிக்கோள்
தொழில்துறையின் பங்களிப்பை
25 சதவீதத்துக்கு உயர்த்த வேண்டும்
என்பதே ஆகும்.
ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே
தொழில்துறையின் பங்களிப்பு
33 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
-----
இதுபோன்ற எண்ணற்ற சாதனைகள்
ஒன்றிய அரசின்
பல்வேறு முட்டுக்கட்டைகளை
உடைத்தெறிந்து சாதிக்கப்பட்டவை.
ஒன்றிய அரசின்
பாரபட்சத்துக்கு ஒரு உதாரணம் :
2023-24 நிதி ஆண்டில்
மத்திய வரித்தொகுப்புக்கு
தமிழ்நாடு
1,80,000 கோடி ரூபாய் பங்களித்தது.
ஆனால் தமிழ்நாடு திரும்பப் பெற்றது
வெறும் 45,052 கோடி ரூபாய் மட்டுமே.
ஒரு ரூபாய் வரி கொடுத்தால்
உ.பி.க்கு 3 ரூபாயும்
பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பிக்கொடுக்கும்
ஒன்றிய அரசு,
தமிழ்நாட்டுக்கு
வெறும் 29 காசு
மட்டுமே திருப்பித் தருகிறது.
அதனால்தான்
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை
"29 பைசா மோடி" என்று
தமிழ்நாட்டு மக்கள்
'அன்போடு' அழைக்கிறார்கள் என்று
நமது துணை முதல்வர் குறிப்பிட்டார்.
????????????????????
"ஒவ்வொரு மாநிலமும்
தங்கள் வரி பங்களிப்புக்கு ஏற்ற வகையில்
நிதிப்பகிர்வு பெற வேண்டும்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை
50 சதவீதத்துக்கு குறையாமல் அளிப்பதை
ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்"
என்ற நமது முதல்வரின் குரல்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரலாக
ஒலிக்க வேண்டும்.
-------
பளபளப்பான காகிதத்தில்
வண்ணப் புகைப்படங்களுடன்
160 பக்கங்களில்
Hard binding உடன்
உருவாக்கப்பட்டுள்ள
நூலின் விலை ரூ 200.
ஆர்வம் உள்ள நண்பர்கள்
99400 90596 என்ற எண்ணுக்கு
Gpay செய்து,
அதே வாட்சப் எண்ணுக்கு
முகவரி அனுப்பினால்
புத்தகம் உங்கள் வீடு தேடிவரும்.
punnagai.media@gmail.com
என்ற மின்னஞ்சலிலும்
தொடர்புகொள்ளலாம்
----------
விரைவில்
நூல் அறிமுகக்கூட்டம்
ஏற்பாடு செய்கிறோம்.
அனைவரும் வருக.
படியுங்கள். பகிருங்கள்
நன்றி.
????????????
திருஞானம்
Founder, Punnagai Educational Magazines
Formerly Channel Head, Sun News