‘பிரேமலு 2’ - பற்றி எதுவும் தெரியாது மமிதா பைஜு தகவல்

‘பிரேமலு 2’ - பற்றி எதுவும் தெரியாது மமிதா பைஜு தகவல்

துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாளத்தில் உருவான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டொம்னிக் அருண் இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. வசூலில் சாதனை படைத்துள்ள இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகிறது. அதில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதில் மமிதா பைஜு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “அதில் நடிக்க இருக்கிறேனா என்பது எனக்குத் தெரியாது. அடுத்தடுத்த பாகங்களில் எனக்கு ஒரு கேரக்டர் இருக்கலாம் என நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இருக்கிறது. ‘பிரேமலு 2’ படம் எப்போது உருவாகும் என்றும் கேட்கிறார்கள். அதுபற்றி அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதுபற்றி எனக்குத் தெரியாது” என்றார். மமிதா பைஜு, பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள ‘டியூட்’ படம் நேற்று வெளியாகி இருக்கிறது.