வீட்டில் ஆட்டம் காட்டும் எலிகள்... கொல்லாமல் விரட்ட இப்படி உருண்டை; தெறித்து ஓடும்!

வீட்டில் ஆட்டம் காட்டும் எலிகள்... கொல்லாமல் விரட்ட இப்படி உருண்டை; தெறித்து ஓடும்!

இது அனைத்தையும் செய்தும் எலி உங்கள் வீட்டில் இருக்கிறது என்றால் நாங்கள் சொல்லும் இந்த முக்கியமான ஒரு டிப் ட்ரை பண்ணி பாருங்க. இதற்க்கு உங்களுக்கு கொஞ்சம் கோதுமை மாவு, டோலோ மாத்திரை ஒன்று மற்றும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வேண்டும். 

வீடுகளில் எலிகள் புகுவது சாதாரணமாயிருந்தாலும், இது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக, எலிகள் உணவுக்காக அடிக்கடி வீடுகளுக்குள் வருகிறன. இரவில் சமைத்த உணவுகள் திறந்தபடியே விட்டால், அதன்வாசனைக்கு இழுக்கப்படும்.வீட்டு பின்புறம் குப்பைகள், பழைய பொருட்கள் மேளிகள் உள்ள இடங்களில் எலிகள் வசிக்க அதிக வாய்ப்பு உள்ளது. கட்டிடங்களின் பழைய குழாய்கள், கம்பிகள் மற்றும் சுவர் இடைவெளிகள் வழியாக எலிகள் வீடுகளில் நுழையக்கூடும்.எலிகள் கடித்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. அவை கிருமிகளை பரப்பக்கூடியவை

.மின்கம்பிகளை கடித்து சேதப்படுத்தும்:இது தீ விபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்கும்,நோய்கள் பரவ வாய்ப்பு,எலிகள் மூலம் லெப்டோஸ்பைரோசிஸ், சல்மொனெல்லா, ஹந்தா வைரஸ் போன்ற ஆபத்தான நோய்கள் பரவக்கூடும்.பயத்தையும் கடுப்பையும் உருவாக்கும்,எலிகள் இரவில் ஓடும் சத்தம், வாசனை மற்றும் அவை ஏற்படுத்தும் கழிவுகள், வீட்டு அமைதியை பாதிக்கும்.

எலிகளை ஒழிக்க இயற்கை வழிகள்,புதினா எண்ணை வாசனையை பிடிக்காது. பருத்தி துணியில் புதினா எண்ணை ஊற்றி எலி வரும் இடங்களில் வைக்கலாம்.
வினிகர் வாசனையும் எலிகளை விலக்க உதவும்.பாஸன் தண்ணீர் + மிளகு தூள் கலவையை எலிகள் ஓடும் பாதையில் தெளிக்கலாம்.எலி வலை அல்லது கப்பல்கள்,மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முறைகள்.உணவுப் பொருட்களை பாட்டில்களில் அல்லது காற்றுப் புகாத பாத்திரங்களில் வைத்தல்.வீட்டு வாசல்களுக்கு அருகே குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ளல்.அடிக்கடி வீட்டு உள்ளும் புறமும் சுத்தம் செய்தல். பழுதான குழாய்கள், சுவர் குறைகள் போன்றவற்றை உடனடியாக சரிசெய்தல்.

இது அனைத்தையும் செய்தும் எலி உங்கள் வீட்டில் இருக்கிறது என்றால் நாங்கள் சொல்லும் இந்த முக்கியமான ஒரு டிப் ட்ரை பண்ணி பாருங்க. இதற்க்கு உங்களுக்கு கொஞ்சம் கோதுமை மாவு, டோலோ மாத்திரை ஒன்று மற்றும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வேண்டும். 

முதலில் அந்த கோதுமை மாவை தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து சப்பாத்தி மாவு போல செய்து அதை இரண்டு பாகங்களாக பிரித்து வைத்து ஒரு பாகத்திற்கு ஒரு டோலோ மாத்திரையை உடைத்து போட்டு பிசைய வேண்டும். இப்போது அந்த டோலோ சேர்க்காத மாவை குட்டி குட்டியாக பிரித்து அந்த உருண்டைக்குள் இந்த மாத்திரை சேர்த்த பாகங்களை குட்டி குட்டியாக உருட்டி உள்ளே வைத்து எங்கு எலி வருகிறதோ, அது வைத்தால் எலி இருந்த இடமே தெரியாமல் தெறித்து ஓடிவிடும். ஏனென்றால் எலிகள் இதை சாப்பிட்டால் அதன் வயிற்றுக்கு இது நல்லது கிடையாது. 

வீட்டில் எலி தொல்லை என்பது சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும், சில எளிய வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும். இது சுகாதாரத்தையும் வீட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முக்கியமான செயல் ஆகும்.