விஜய் ஆண்டனியை இயக்குகிறார் மாறன்

விஜய் ஆண்டனியை இயக்குகிறார் மாறன்

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கியவர் மு.மாறன். அவர் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருக்கிறது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. இப்போது சசி இயக்கும் ‘நூறு சாமி’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.