எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி சப்தமே இன்றி பொங்கல் ஹிட்டமாக மாறிய தலைவர் தம்பி தலைமையில் படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை ரிலீசாக, கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெளியானது.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு கம்பேக் படமாக இது அமைந்த நிலையில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த பொங்கலையொட்டி சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியார் படங்கள் வெளிவந்தன.
குறிப்பாக பராசக்தி படம் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை பொங்கல் வின்னர் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
படத்தில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை, குடும்பப் பின்னணி ஆகியவை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதால், இந்தியில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி ரீமேக்கில் நடிக்கப்போகும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.