கில்லி ரிக்கார்டை நொறுக்கிய மங்காத்தா.. ரீ ரிலீஸில் மாஸ் காட்டும் அஜித் குமார்..

கில்லி ரிக்கார்டை நொறுக்கிய மங்காத்தா.. ரீ ரிலீஸில் மாஸ் காட்டும் அஜித் குமார்..
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் விஜயின் கில்லி முதல் நாளில் 4 கோடியே 23 லட்ச ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது.
அஜித் நடிப்பில் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன மங்காத்தா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் விநாயக் மகாதேவ் என்ற கேரக்டரில் மிகவும் வித்தியாசமான நடிப்பை அஜித் வெளிப்படுத்தியிருந்தார்.
பணத்திற்காக எதையும் செய்யும் எதிர்மறையான கேரக்டரில் அஜித் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தது. இந்நிலையில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மங்காத்தா திரைப்படம் நேற்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் ரசிகர்களை அதிகம் திருப்தி படுத்தாத நிலையில் மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்தது.
இதனால் ரீ ரிலீஸ் படம் என்று பார்க்காமல் அஜித்தின் ரசிகர்கள் ஏராளமானோர் முதல் நாளில் மங்காத்தா படத்தை விரும்பி பார்த்தனர்.
அந்த வகையில் மங்காத்தா மறு வெளியீட்டில் முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் சுமார் 5 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் சுமார் 4.50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் வசூல் செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் விஜயின் கில்லி முதல் நாளில் 4 கோடியே 23 லட்ச ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. அந்த ரெக்கார்டை மங்காத்தா திரைப்படம் முறியடித்து விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்.