தியேட்டர் போக டைம் இல்லையா? இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் மெகா லிஸ்ட் இதோ!

தியேட்டர் போக டைம் இல்லையா? இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் மெகா லிஸ்ட் இதோ!
தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்துள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிச்சா சுதீப் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள மார்க் என்ற திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ளது. மாஸ் த்ரில்லர் படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்திரயான் என்ற வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது. அறிவியல் தொடர்களில் ஆர்வம் உள்ளவர்கள் இதனை பார்க்கலாம்.
ஆஹா ஓடிடி தளத்தில் ஷம்பாலா என்ற படம் வெளிவந்துள்ளது. 1980 களில் நடப்பது போன்ற கதைக்களத்தை இந்த படம் கொண்டுள்ளது. அமானுஷ்ய படங்களை விரும்புவோருக்கு இந்த படம் விருந்தாக அமையும்.
நடிகை சோபிதா துலிபாலா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள சீக்கட்டிலோ என்ற க்ரைம் த்ரில்லர் படம் அமேசான் ஓடிடியில் வெளிவந்து வரவேற்பை பெறுகிறது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை விரும்புவோர் இதனை பார்க்கலாம் என விமர்சகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதேபோன்று திரையரங்குகளில் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற சிறை திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.