ராகுல்காந்தி, கனிமொழி சந்திப்பில் 41 சீட்டுகள் கேட்கப்பட்டதா? செல்வப்பெருந்தகை விளக்கம்

ராகுல்காந்தி, கனிமொழி சந்திப்பில் 41 சீட்டுகள் கேட்கப்பட்டதா? செல்வப்பெருந்தகை விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி சந்திப்பின் போது 41 சீட்டுகள் கேட்கப்பட்டதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் அதன் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் தகவல்களை கேட்டறிந்தனர்.

இதன் பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தமிழ்நாட்டில் முன்மாதிரியான மருத்துவமனையாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளது. குழந்தை இறப்பு சதவிகிதத்தை முழுமையாக குறைத்து இருக்கிறார்கள். இது பாராட்டக் கூடியது.

கண் அறுவை சிகிச்சை, மகப்பேறு பிரசவம் பார்ப்பதில் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது. தஞ்சாவூருக்கு தேவையான சிறப்பு கல்வி நிறுவனங்களை இந்த பகுதி மக்கள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக சட்டப் பேரவை பொதுகணக்கு குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. வரும் நிதி நிலை அறிக்கையில், இது தொடர்பான அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடும் போது, நான் அது குறித்து கண்டிப்பாக சொல்வேன்'' என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.