ஒரு டிரில்லியன் டாலர் கனவு..! புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்
ONE TRILLION DOLLAR DREAM

புன்னகை கல்வி மாத இதழ்களின் நிறுவனர் திரு திருஞானம் எழுதிய ஒரு டிரில்லியன் டாலர் கனவு..! (One Trillion Dollar Dream..!) புத்தகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக உயர்த்த வேண்டும் என்ற கனவு இலக்கை நிர்ணயித்துள்ளார் நமது முதல்வர் அவர்கள்.
ஒரு டிரில்லியன் டாலர்
பொருளாதாரம் என்றால் என்ன?
"2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்" என்ற நமது முதல்வரின் கனவு இலக்கை
தமிழ்நாடு சாதிப்பதற்கு என்ன வகையான பணிகள் நடந்து வருகின்றன?
ஒன்றிய அரசின் தடைக் கற்களைத் தகர்த்து, இந்தியாவிலேயே மிக அதிகமான பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு சாதித்தது எப்படி?
போன்ற கேள்விகளுக்கு விடைதருகிறது "ஒரு டிரில்லியன் டாலர் கனவு" புத்தகம்.
சன் நியூஸ், பாலிமர் உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சிகளின் முன்னாள் செய்தி ஆசிரியரும், புன்னகை மீடியா தலைவருமான திரு. திருஞானம் எழுதிய இந்த நூலை புன்னகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 200.
தொடர்புக்கு 9940090596 punnagai.media@gmail.com