''அதிமுகவோ, பழனிசாமியோ எப்போதும் சொன்னதை செய்ய மாட்டார்கள்'' - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
அதிமுக ஆட்சியோ, பழனிசாமியோ எப்போதும் சொன்னதை செய்யமாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக சிவகங்கை மாவட்டம் வந்துள்ள நிலையில் பல்வேறு திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு. கீழடி கண்டுபிடிப்புகள் முதல் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி ஆகியோரின் வீரத் தியாகங்கள் வரை தமிழ்நாட்டின் விடுதலை வரலாற்றில் சிவகங்கையின் முக்கியத்துவம் உள்ளது. இந்த மண்ணில் நின்றபோது தமிழ் வீரமும், உணர்ச்சியும் பொங்கி எழுகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும், அவர்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக 2011-ல் சென்னை-குமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்றார்கள். செய்தார்களா? 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்றார்கள். அதுகுறித்து வாயே திறக்காமல் அடுத்த பொய் வாக்குறுதியை அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியோ, பழனிசாமியோ எப்போதும் சொன்னதை செய்ய மாட்டார்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதே போல, திமுக ஆட்சி சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும் என்று மக்களுக்கு தெரியும்.
சிவகங்கையில் ரூ.2,119 கோடி செலவில் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்கள் லட்சக்கணக்கான பயனாளிகளை சென்றடைந்துள்ளது. திமுக சொன்னதை செய்யும், சொல்லாததையும் செய்யும் அரசு. இன்னும் பல கனவுத் திட்டங்கள் உள்ளது. எனவே, திராவிட மாடல் 2.0-க்கு மக்களின் ஆதரவு தேவை. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோரின் சிறப்பான ஏற்பாடுகளை பாராட்டிய முதலமைச்சர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தார். சிராவயலில் காந்தி–ஜீவா நினைவரங்கம், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், கவியரசு முடியரசனார் சிலை திறப்பு ஆகியவை இதில் இடம்பெற்றன.
மேலும், கானாடுகாத்தானில் செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி புதிய கட்டடங்கள், டாக்டர் சி.சுப்பிரமணியம் பெயரில் கலை அரங்கம், காரைக்குடி அருகே ரூ.100 கோடி மதிப்பிலான சட்டக்கல்லூரி, ரூ.32 கோடி மதிப்பிலான மினி டைடல் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மொத்தமாக ரூ.2,560 கோடி மதிப்பிலான 49 பணிகள் திறப்பு, ரூ.13.36 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல், ரூ.205