நடனக் காட்சியில் விபத்து: ஷ்ரத்தா கபூருக்கு காலில் எலும்பு முறிவு
பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். ‘ஆஷிகி 2’, ‘ஏக்தா வில்லன்’, ‘பாஹி’, ‘ஸ்திரீ 2’, பிரபாஸ் ஹீரோவாக நடித்த ‘சாஹோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்போது ‘ஈதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பிரபல மராத்தி நடனக் கலைஞரும் பாடகியுமான விதாபாய் பாவ் மங் நாராயண்காங்கர் என்பவர் வாழ்க்கை கதையைக் கொண்ட படம். லக்ஷமண் உடேகர் இயக்கும் இப்படத்துக்காக, லாவணி பாடல் காட்சியைப் படமாக்கி வந்தனர்.