ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

ஒருநாள் தொடரை வெல்வது யார்? - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்​லும். இதனால் ரசிகர்​கள் மத்​தி​யில் இந்த போட்டி மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இரு அணி​கள் இடையே ராஞ்​சி​யில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. தொடர்ந்து ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் 359 ரன்​கள் இலக்கை விரட்​டிய தென் ஆப்​பிரிக்க அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலையை அடைந்​தது.

இந்​நிலை​யில் தொடரை வெல்​வது யார்? என்​பதை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்​துள்ள 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று நடை​பெறுகிறது.

இதற்கு பிரசித் கிருஷ்ணா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா, குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​ப​டாததே காரணம். அதேவேளை​யில் ஆல்​ர​வுண்​ட​ராக வாஷிங்​டன் சுந்​தரும் சிறப்​பான செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. இன்​றைய ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​டிங் வரிசையை கட்​டுப்​படுத்​தி​னால் மட்​டுமே தொடரை வெல்​வதற்​கான வாய்ப்பு கைகூடும்.

பேட்​டிங்​கில் விராட் கோலி அசுர பார்​மில் உள்​ளார். தொடர்ச்​சி​யாக இரு சதஙக்ள் விளாசி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். இதே​போன்று கடந்த ஆட்​டத்​தில் அதிரடி​யாக விளை​யாடி சதம் விளாசிய ருது​ராஜ் கெய்க்​வாட்​டும் மீண்​டும் ஒரு ரன்​வேட்​டை​யில் ஈடுபட முயற்​சிக்​கக்​கூடும். அதேவேளை​யில் ரோஹித் சர்​மா​வும் தனது பங்​களிப்பை வழங்​கு​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் இரு ஆட்​டங்​களி​லும் முறை 18, 22 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். விரை​வாக ரன்​கள் சேர்க்க வேண்​டும் என்று முனைப்​புடன் செயல்​பட்டு விக்​கெட்டை பறி​கொடுப்​பதை ஜெய்​ஸ்​வால் வாடிக்​கை​யாக கொண்​டுள்​ளார். மேலும் இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக தடு​மாறி வரு​கிறார். அனைத்து வடிவி​லான போட்​டிகளி​லும் ஜெய்​ஸ்​வால் இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக 30 முறை ஆட்​ட​மிழந்​துள்​ளார். இதற்​கான தீர்வை அவர், கண்​டு​பிடிக்க முயற்​சிக்​கக்​கூடும்.