போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வைகோ வலியுறுத்தல்
போதைப் பொருட்களுக்கு எதிராகவும், சமத்துவ சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வரும் ஜன. 2-ம் தேதி திருச்சியிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொண்டர்கள் தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். கல்லூரி வரை வந்த போதைப் பொருள் இன்று பள்ளி வரை வந்துவிட்டது. இளம் வயதிலேயே சாதி, மத கருத்துகளை விதைப்பதால் மாணவர்களிடம் மோதல்கள் நடைபெறுகின்றன.
அதை இழப்பாக நான் கருதவில்லை. என் நாணயம் குறித்து எதிர்க்கட்சிகள்கூட முன்வைக்காத குற்றச்சாட்டை மல்லை சத்யா முன்வைத்துள்ளார். பொய்களால் எங்களை கொச்சைப்படுத்த முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.