ரீ ரிலீஸாகும் தெறி, மங்காத்தா!
வரும் 23-ம் தேதியன்று விஜய்யின் தெறி, அஜித்தின் மங்காத்தா திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகின்றன.
அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம், வசூலில் கல்லா கட்டியது. இதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த 2 திரைப்படங்களும் வரும் 23-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே 2023-ம் ஆண்டில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி நேருக்கு நேர் மோதின. இதைத் தொடர்ந்து, தற்போது 2 பேரின் படங்களும் ரீ ரிலீஸ் ஆகின்றன.
முன்னதாக, ஜனவரி 15-ம் தேதியன்று தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு முடிவு செய்திருந்தார். ஆனால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக ஏதுவாக அந்தத் தேதியை ஒத்திவைத்தார்.