சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி போன விஜய்.. சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர்களை பார்த்து செய்த காரியம்

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி போன விஜய்.. சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர்களை பார்த்து செய்த காரியம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்காக விஜய் டெல்லி புறப்பட்டு சென்ற போது அவர் காட்டிய ரியாக்‌ஷன் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

நாளை விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்பே டெல்லிக்கு விஜய் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்போது விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த திங்கட்கிழமை விஜய் சிபிஐ முன்பு ஆஜர் ஆனார். விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கும், உங்களது இதயப்பூர்வ இரங்கலை பகிர்ந்து கொள்ளுங்கள் உடனடியாக சென்னை திரும்பியது ஏன்? கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? நெரிசல் ஏற்பட்ட பிறகு உடனடியாக சென்னை திரும்பியது ஏன்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜனவரி 12ஆம் தேதி விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், அதற்கு மறுநாளும் விசாரணை நடத்தப்படும் என சொல்லப்பட்டது. 

எனினும், விஜய் தரப்பில் பொங்கல் விடுமுறை கொண்டாட்டங்கள் காரணமாக, மற்றொரு நாளில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவதாக கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில் நிச்சயம் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி விஜய் சென்னை திரும்பினார். அன்றைய நாள் மாலை 7 மணியளவில் மீண்டும் சிபிஐ தரப்பில் ஜனவரி 19ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது. இதனை தவெகவினரும் உறுதி செய்தனர். இந்த நிலையில் சிபிஐ சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று மாலையே விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார்.

தனிவிமானத்தில் டெல்லி சென்ற விஜய் பிற்பகல் 5.30 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கு திரண்டு ரசிகர்களை பார்த்து ஹார்ட்டின் சிம்பளை காட்டிவிட்டு சென்றார். கடந்த முறை சிபிஐ முன் ஆஜராக சென்ற விஜய் கருப்பு சட்டை அணிந்து சென்றார். ஆனால், இன்று வெள்ளை சட்டை அணிந்தபடி விஜய் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

 சிபிஐ இடம் தவெக அடுக்கிய ஆதாரம் காவல் அதிகாரிகளிடமும் விசாரணை விஜய்யிடம் கடந்த 12 ஆம் தேதி சிபிஐ விசாரணை நடத்திய போது தமிழக காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி நிர்மல் குமார் ஜோஷி உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல, கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்திலும் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தியது. இப்படி ஒரே நாளில் இருவேறு இடங்களில் சிபிஐ அதிரடியாக விசரணை நடத்தினர்.

எனவே, நாளை விஜய்யிடம் விசாரணை நடைபெறும் போது காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் இன்று இரவு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். பாதுகாப்பு தீவிரம் நாளை காலை தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் விசாரணைக்கு செல்ல உள்ளார். விஜய் வருகையையொட்டி அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் நாளை அவர் செல்லும் பாதைகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.