ராமேசுவரம்: போதைப் பொருள் கடத்திய 11 பேர் கைது
இலங்கையின் தெற்குப் பகுதியில் திக்கோவிட்டவிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த 2 மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
சோதனையில் இரு படகுகளில் 184 கிலோ ஹெராயின், 112 கிலோ ஐஸ் போதைப் பொருட்களை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருட்களையும், இரு படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர்.