தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சிறந்த தேர்தல் விருது

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சிறந்த தேர்தல் விருது

தேசிய அளவிலான சிறந்த மாவட்ட தேர்தல் விருது, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பெற்றுக் கொண்டார்.

ஆண்டுதோறும் ஜன. 25-ம் தேதி தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுகிறது. இதில், சிறந்த தேர்தல் மாவட்டங்கள், அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி, தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துதல் பிரிவில் 2025 ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்துக்கான விருதுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் தொழில்​நுட்​பத்தை முழு​மை​யாகப் பயன்​படுத்​தி​யது, வாக்​காளர் சேர்த்​தல், நீக்​கல் தொடர்​பாக வீடு, வீடாகச் சென்று படிவம் வழங்​கி, அதை இணை​ய​வழி​யில் பதிவேற்​றம் செய்​வதை விரை​வாக மேற்​கொண்​டது உள்​ளிட்ட பணி​களைப் பாராட்​டி, தஞ்​சாவூருக்கு சிறந்த மாவட்ட தேர்​தல் விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நடை​பெற்ற தேசிய வாக்​காளர் தின விழா​வில், தஞ்​சாவூர் மாவட்​டத்​துக்​கான விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், ஆட்​சி​யர் பா.பிரி​யங்கா பங்​கஜம் பெற்​றுக் கொண்​டார்.

விழா​வில், மத்​திய சட்​டம் மற்​றும் நீதித் துறை இணை அமைச்​சர் அர்​ஜூன் ராம் மேக்​வால், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார், தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​பீர்​சிங் சந்​து, விவேக் ஜோஷி உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.