ஒடிசா அணிக்கு 455 ரன் இலக்கு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் இடையிலான போட்டி புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 286 ரன்களும், ஒடிசா 148 ரன்களும் எடுத்தன.
138 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 88.2 ஓவர்களில் 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஆதிஷ் 88, சோனு யாதவ் 74, குருசாமி அஜிதேஷ் 49, கேப்டன் சாய் கிஷோர் 40 ரன்கள் சேர்த்தனர். ஒடிசா அணி சார்பில் பாதல் பிஷ்வால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 455 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஒடிசா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.