நியூலாந்து டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகல்?
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது எதிர்வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கெனவே அரிவித்துள்ள நிலையில், வீரர்களும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதும் கடைசி டி20 தொடர் என்பதால், இத்தொடரின் மீது ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நட்சத்திர பேட்டர் திலக் வர்மா காயம் அடைந்தார். சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பை தொடரின் போது திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் அவர் காயத்திலிருந்து மீள அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், அதனால் அவர் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து திலக் வர்மா விலகியதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் அவருக்கான மாற்று வீரர் குறித்து இதுவரையிலும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் அவர் பவுலிங்கில் 5 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில், களத்தை விட்டு வெளியேறினார். அதன்பின் பேட்டிங் செய்ய வந்த வாஷிங்டன் சுந்தர் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி, அணியின் வெற்றிக்காக உதவி இருந்தார். இருப்பினும் அவர் பேட்டிங் செய்யும் போது வாலியால் அவதிப்பட்டார். அதன்பின் அவர் சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது இடுப்பு பகுதியில் காயம் இருப்பது உறுதியாகியானது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியதாக அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த அறிமுக வீரர் ஆயுஷ் பதோனிக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்புய் வழங்கப்பட்டிருந்தது.