விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லி அணிக்கு பந்த் கேப்டன்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லி அணிக்கு பந்த் கேப்டன்

விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும் டெல்லி அணிக்கு கேப்டனாக இந்திய அணி வீரர் ரிசப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் 24-ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நடக்கும் 7 போட்டிகளில் டெல்லி அணி விளையாடவுள்ளது. இதற்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெல்லி அணியில் பந்த், கோலி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் அவர்கள் 2 பேரும், 7 போட்டிகளிலும் விளையாடுவார்களா என உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் 2 போட்டிகளில் மட்டும் கோலி விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இக்காலகட்டத்தில் இந்திய அணி விளையாடும் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாட வேண்டியுள்ளது. 

ஆதலால் விஜய் ஹசாரே கோப்பைக்கான அனைத்து போட்டிகளிலும் டெல்லி அணி சார்பில் அவர் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.