உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை கத்தாரில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் அணி மட்டும் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளன.
இதில் ஆசியா மற்றும் ஓசியானா பிரிவில் இருந்து கத்தாரை தவிர்த்து 7 அணிகள் தகுதி பெறும். இந்நிலையில் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் ஆசியா மற்றும் ஓசியானா பிரிவில் மொத்தம் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ‘டி’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் சவுதி அரேபியா, லெபனான், கத்தார் அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரு முறை மோதும். இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது கட்ட தகுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த வகையில் ஆசியா மற்றும் ஓசியானா பிரிவில் இருந்து 2-வது சுற்றுக்கு மொத்தம் 12 அணிகள் தகுதி பெறும். இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் என 6 அணிகளுடன் 4-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்திய அணி தனது தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் கடந்த 27-ம் தேதி சவுதி அரேபியாவுடன் மோதியது. ரியாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சவுதி அரேபியா 75–51 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 2-வது ஆட்டம் இன்று (நவ.30-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா கூறும்போது, “சவுதி அரேபியா - இந்தியா இடையிலான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்ளது.
இந்திய அணி கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சர்வதேச தரத்திலான பயிற்சிகளுடன் புள்ளிகளை குவிப்பதிலும், விரைவாக செயல்படுவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சி முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாகவே கடந்த 6 மாதங்களாக இந்திய அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 2-வது ஆட்டம் இன்று (நவ.30-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா கூறும்போது, “சவுதி அரேபியா - இந்தியா இடையிலான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்ளது.
இந்திய அணி கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சர்வதேச தரத்திலான பயிற்சிகளுடன் புள்ளிகளை குவிப்பதிலும், விரைவாக செயல்படுவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சி முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாகவே கடந்த 6 மாதங்களாக இந்திய அணி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறது.