BREAKING: இந்தியாவிடம் போராடி தோற்றது தெ.ஆப்பிரிக்கா

BREAKING: இந்தியாவிடம் போராடி தோற்றது தெ.ஆப்பிரிக்கா

ராஞ்சியில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 349 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும், கே.எல். ராகுல் 60 ரன்களும் சேர்த்தனர். 

குறிப்பாக, ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய விராட் கோலி தனது 52ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார். ஜெய்ஸ்வால் 18, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13, ரவீந்திர ஜடேஜா 32 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. முதல் 3 விக்கெட்டுகள் வேகமாக சரிந்தபோதிலும் பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர்.

குறிப்பாக, போஸ் கடைசி வரை போராடினார். எனினும் அவர் 67 ரன்களில் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றி உறுதியானது. இதன்மூலம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.