நடிகை தற்கொலை... பரபரப்பு புதிய தகவல்

நடிகை தற்கொலை... பரபரப்பு புதிய தகவல்

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சைதாப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் ராஜேஸ்வரி (39). தொலைக்​காட்சி தொடர்​களில் துணை நடிகை​யாக நடித்து வந்த இவர் திரு​மண​மாகி முத்​தி​யால்​பேட்​டை​யில் வசித்து வந்​தார்.

ராஜேஸ்​வரிக்​கும் அவரது கணவருக்​கும் இடையே நீண்ட நாட்​களாக கருத்து வேறு​பாடு இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் சில தினங்​களுக்கு முன்​னர் கணவன் - மனை​விக்கு இடையே தகராறு ஏற்​பட்​ட​தாம்.

இதனால் கணவரிடம் கோபித்​துக் கொண்டு ராஜேஸ்​வரி சைதாப்​பேட்​டை​யில் உள்ள தனது தாய் வீட்​டுக்கு சென்​றுள்​ளார். கணவரிடம் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக கடும் மன உளைச்​சலில் ராஜேஸ்​வரி இருந்​துள்​ளார்.