"வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் எப்போது?" - அப்டேட் கொடுத்த இயக்குநர் பொன்ராம்!

"வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் எப்போது?" - அப்டேட் கொடுத்த இயக்குநர் பொன்ராம்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் படம் நிச்சயம் எடுப்பேன் என இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கொம்புசீவி. இப்படத்தை தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் படத்தின் இயக்குநர் பொன்ராம், நடிகர் சண்முகப்பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் கண்டு ரசித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன் என்றார்.
தன்னுடைய அடுத்த கனவு அதுதான் என்றும், எனக்கு சவாலான திட்டம் அது என்றும் இயக்குநர் பொன்ராம் தெரிவித்தார். அந்தப் படத்தை எடுக்க முடியாது என பலர் கூறி வருவதாக தெரிவித்த பொன்ராம், எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான கதை பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூடிய சீக்கிரம் அதனை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.