22வது முறையாக தொடர் நாயகன் விருது.. அசத்திய கோலி
22வது முறையாக தொடர் நாயகன் விருதை இந்திய அணி வீரர் விராட் கோலி வென்றுள்ளார்.
தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 2 சதங்கள், 1 அரைசதம் ஆகியவற்றை கோலி விளாசினார். அவரின் பேட்டிங் சராசரி 117 சதவீதமாகும். இது 2023 ஜனவரிக்கு பிறகு அவரின் சிறந்த ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக கோலிக்கு, தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இது அவரின் 22வது போட்டித் தொடர் நாயகன் விருது ஆகும். ஒருநாள் போட்டித் தொடரில் 12வது தொடர் நாயகன் விருது ஆகும்.
3 ஒருநாள் போட்டிகளிலும் அவர் 12 சிக்சர்களை விளாசினார். இதுவும் கோலியின் சாதனை ஆகும். ஒருநாள் போட்டித் தொடர்களில் இதுவே அவர் அடித்த சிக்சர்கள் ஆகும். அவற்றில் உலக கோப்பைத் தொடர் போட்டிகளும் அடங்கும்.
விராட் கோலி கடந்த சில மாதங்களாக சரியான பார்மில் இல்லாமல் இருந்தார். இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் தெ.ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடி, அந்த பேச்சுக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.