'ஊ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது ஏன்? - மனம் திறந்தார் சமந்தா

'ஊ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது ஏன்? - மனம் திறந்தார் சமந்தா

நடிகை சமந்​தா, மா இன்டி பங்​காரம் என்ற தெலுங்கு படத்​தைத் தயாரித்து நடித்து வரு​கிறார். இப்​படம் அடுத்த வருடம் வெளி​யாக இருக்​கிறது. அடுத்து ராஜ் மற்​றும் டிகே இயக்​கும் ரக்த் பிரம்​மந்த் என்ற படத்​தி​லும் நடித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “என் வாழ்க்​கை​யில் நடந்த ஒவ்​வொரு விஷய​மும் அனை​வருக்​கும் தெரி​யும். எல்​லாம் வெளிப்​படை​யாகவே நடந்​தது. விவாகரத்து மற்​றும் உடல்​நலம் அடிப்​படை​யில் நான் எவ்​வளவு கஷ்டப்​பட்​டேன் என்​பதும் தெரி​யும். அந்த நேரத்​தில் எனக்கு எதி​ராக சில லட்​சம் ட்ரோல்​கள் வந்​தன. அதில் அவர்​கள் விரும்​பியபடி தீர்ப்​பு​களை​யும் வழங்​கினர்.

இருந்​தா​லும் என் வாழ்க்​கை​யில் என்ன நடக்​கிறது என்​ப​தற்​கான பதில் எனக்​குத் தெரிய​வில்​லை. நான் முழு​மை​யானவள் அல்ல; தவறுகள் செய்​ய​லாம், தடு​மாறலாம், ஆனால் சிறப்​பாக இருக்க முயற்​சிக்​கிறேன்.

‘புஷ்​பா’ படத்​தில் இடம்​பெற்ற ‘ஊ சொல்​றியா மாமா' பாடலில் ஆடியதுபற்றி கேட்​கிறார்​கள். அந்​தப் பாடலை சவாலாக எடுத்​துக் கொண்​டு​தான் நடித்​தேன். என்​னால் அப்​படி நடிக்க முடி​யு​மா? என்று பார்க்க விரும்​பிய​தால் எனக்கு நானே கொடுத்​துக் கொண்ட சவால். என்னை எப்​போதும் நான் கவர்ச்​சி​யானவராக கருத​வில்​லை.

யாரும் எனக்கு ‘போல்​டான’ வேடங்​களைத் தர மாட்​டார்​கள் என்று எனக்​குத் தெரி​யும். அதனால்​தான் அதை ஒரே ஒரு முறை அனுபவ​மாக எடுத்​துக் கொண்​டு நடித்தேன். எனக்கு நிறைய லட்​சி​யங்​கள் இருக்​கின்​றன. லட்​சி​யம் என்​பது ஒரு நோக்​கத்​துடன் இணைந்​திருக்க வேண்​டும். கட்​டுப்​பாடின்றி ஓடக் கூடாது​” என்​றார்​.