‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியானது; சொந்த குரலில் அசத்திய விஜய்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலின் 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படம் என்று சொல்லக்கூடிய 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டில், மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியானது. பாடலின் துவக்கத்திலேயே ''எங்கண்ணா கச்சேரி.. தளபதி கச்சேரி'' என துவங்கி பாடல் ஒலிக்க இசை கச்சேரி ஒன்றில் அனிருத் பாடுவது போல வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அதில் விஜயின் சிக்னேச்சர் முத்திரை காட்டுவது போலவும், நண்பா நன்றி செல்லம் பாரு.. நம்பிக்கையா சேரு.. காலம் பொறக்குதுடா'' என பாடல் துவங்குகிறது.
சாதி, மத பேதங்கள் இல்லை என்று கூறுவது போலவும் பெரியாரையும், காரல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் முன்னிறுத்தி கருத்துகள் சொல்வது போலவும் பாடல் இடம் பெற்றிருக்கிறது. மொத்தத்தில் இந்த பாடல் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்திற்கு ஏற்ற பாடலாய் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.