மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதன் படப்பிடிப்பில் ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியிருக்கிறார் நெல்சன். அக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் படத்தினை முடித்துவிட்டு, ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தினை நெல்சன் இயக்குவார் எனத் தெரிகிறது. இனி வரும் நாட்களில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகக் கூடும்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இதில் தான் ரஜினி - நெல்சன் கூட்டணி உருவானது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் வேறு சில புதிய நடிகர்களும் நடித்து வருவதை படக்குழுவினர் உறுதிப்படுத்தினார்கள்.