‘வாடகை கணவர்கள்’ திட்டம்... எங்கே தெரியுமா?
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சில பகுதிகளில் வாடகை மனைவிகள் திட்டம் சில ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. ஆனால், ஆண்கள் வாடகை கணவர்களாக செல்லும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அது எங்கே தெரியுமா?
தாய்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலா பயணிகளை கவர வாடகை மனைவிகள் என்கிற பெயரில் பெண்கள் தற்காலிக மனைவிகளாக செல்லும் வழக்கம் உள்ளது. இந்தியாவில் கூட சில பகுதிகளில் வாடகை மனைவிகள் திட்டம் சில ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. ஆனால், ஆண்கள் வாடகை கணவர்களாக செல்லும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அது எங்கே தெரியுமா?
ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான ‘லாட்வியா’ என்கிற நாட்டில் தான் இந்த வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. லாட்வியா நாட்டில் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தான் இப்படியான வழக்கம் உருவாக காரணம் எனச் சொல்லப்படுகிறது. உலக அளவில் ஆண்கள் அதிகமாக இருந்தாலும், சில நாடுகளில் ஆண்–பெண் விகிதாசாரத்தில் பெரிய அளவு மாறுபாடுகள் இருக்கின்றன. வட இந்தியாவில் ஆண்–பெண் விகிதாசாரத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அங்கே திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது ஆண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு நேர்மாறாக லாட்வியா நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. எந்த அளவுக்கு தெரியுமா? ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சுமார் 15.5% அதிகமாக உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சராசரி இடைவெளியை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் அங்கே 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட இரண்டு மடங்கு பெண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காரணங்களால் லாட்வியன் பெண்கள் ஆண் துணை இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதில் இளம் பெண்கள் ஆண் துணை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதையடுத்தே லாட்வியாவில் ‘ஒரு மணி நேர வாடகை கணவர்கள்’ என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சிகள் இந்த திட்டத்தின் மூலம் ஆண்கள் வாடகைக்கு விடப்படுகின்றனர். இதற்காக ஆண்களுக்கு மணிக்கு இவ்வளவு கட்டணம் என நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், இந்த ‘வாடகை கணவர்கள்’ திட்டம் காதல் உறவுகளுக்கு என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆண்கள் பற்றாக்குறையால் லாட்வியாவில் அன்றாட வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பிளம்பிங், வயரிங், எலெக்ட்ரிக்கல் போன்ற வேலைகளை பெண்கள் செய்ய முடியாத சூழல் இருக்கிறது.
இதையடுத்தே ‘வாடகை கணவர்கள்’ திட்டம் மூலம் இங்குள்ள பெண்கள் பிளம்பிங், வயரிங் போன்ற வீட்டு வேலைகளுக்காக ஆண்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த போக்கு தற்போது லாட்வியாவில் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. வாடகை கணவர் திட்டம் என்பது லாட்வியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்து போன்ற சில நாடுகளிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதற்காக ஏஜென்சிகளும் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் வாடகை கணவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
Admin Jan 16, 2026 0 95
Admin Jan 17, 2026 0 69
Admin Jan 18, 2026 0 62
Admin Jan 20, 2026 0 55
Admin Jan 20, 2026 0 53
Admin Oct 24, 2025 0 38
Admin Oct 24, 2025 0 27
Admin Oct 24, 2025 0 48
Admin Oct 24, 2025 0 17
Admin Jan 20, 2026 0 11
Admin Dec 23, 2025 0 100
மாதம் ரூ.69,000 சம்பளம் தரும் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 8 நாள்களே...