செட்டிகுளம் பண்ணையூரில் பொங்கல் போட்டி

செட்டிகுளம் பண்ணையூரில் பொங்கல் போட்டி
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பண்ணையூரில் முத்தாரம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 43வது பொங்கல் போட்டி நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் சிறப்பு  
விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான சௌந்தரராஜன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முத்தாரம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முருகன், முன்னாள் தலைவர் முத்தாரம்மன் கோவில் முன்னாள் தலைவர் ஆறுமுக நாடார், சமூக சேவகர் சேகர், செட்டிகுளம் அரசு மருத்துவர் வினோத் கண்ணன், கூடன்குளம் அனுமின் நிலைய மருத்துவர் ஹேமா,  சிவசக்திபுரம் அதிமுக கிளை செயலாளர் ராஜதுரை, மற்றும் முத்தாரம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.