உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ​ராவ், பிரீத்தி அஸ்​ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்​களில் நடிக்​கும் க்ரைம் த்ரில்​லர் படம், ‘நிறம்’. நிதின் சத்​யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்​ளிட்​டோர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை​ யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் இந்​தப் படம் வெளி​யாக இருக்​கிறது. சான்​டானியோ டெர்​சியோ ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை கிருஷ்ண பலராம் இயக்​கி​யுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்​சர்ஸ் குழு​மத்​தின் ஓர் அங்​க​மான கே ஸ்கொயர் சினி​மாஸ் தயாரிக்​கிறது. இதன் இணைத் தயாரிப்​பாளர் பி.​ராஜேஷ்.

இப்​படம் பற்றி கிருஷ்ண பலராம் கூறும்​போது, “பச்​சோந்தி போல் மாறும் மனிதர்​களின் பல்​வேறு நிறங்​களைக் குறிக்​கும் வகை​யில் ‘நிறம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளோம். சிறிய படமாகத் தொடங்கி இன்று பெரிய பட்​ஜெட்​டில் நிறைவடைந்​துள்​ளது. இதன் கதை அனைத்து மொழிகளுக்​கும் பொருந்​தும் என்​ப​தால் பன்​மொழிப் படமாக உரு​வாக்கி இருக்​கிறோம். மருத்​து​வ​மனை மற்​றும் கல்​லூரியைச் சுற்​றிய கதை​யாக அமைந்​துள்​ளது.

ஒரு குற்ற வழக்​கில் தொடர்​புப்​படுத்​தப்​படும் நாயகன், சதி வலைகளைத் தகர்த்​தெறிந்து திடுக்​கிடும் உண்​மை​களை வெளிக்​கொணர்​வது கதை. உண்மை சம்​பவங்​களின் அடிப்​படை​யில் புனையப்​பட்​டுள்ள இந்த கதைக்கு அதற்​கேற்ற நடிகர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். ‘டிஷ்யூம்’ படத்​துக்கு ஒளிப்​ப​திவு செய்த பின்​னர் இங்​கிலாந்து சென்று விட்ட சான்​டானியோ டெர்​சி​யோ, இக்​கதையை கேட்​ட​வுடன் இந்​தியா வந்து முழு ஈடு​பாட்​டுடன் பணி​யாற்​றி​யுள்​ளார். இது​வரை படம் பார்த்த அனை​வரும் பா​ராட்​டி​யுள்​ளனர்​” என்​று தெரி​வித்​தார்