அடர்த்தியான, பளபளப்பான முடி வேண்டுமா? முடி வளர்ச்சியைத் தூண்டும் 5 வைட்டமின்கள் இதோ!

அடர்த்தியான, பளபளப்பான முடி வேண்டுமா? முடி வளர்ச்சியைத் தூண்டும் 5 வைட்டமின்கள் இதோ!

அடர்த்தியான, பளபளப்பான, வேகமாக வளரும் முடி வேண்டும் என்று யாருக்குதான் ஆசை இருக்காது? ஆனால் தற்போது இருக்கும் மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை முடி வளர்ச்சியை தாமத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், கடுமையாக முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எண்ணெய்கள், ஹேர் மாஸ்க்குகள் மற்றும் சீரம்கள், முடி வளர்ச்சியை வெளிப்புறத்திலிருந்து ஆதரித்தாலும், ஆரோக்கியமான முடி உண்மையாகவே உள்ளே இருந்து தொடங்குகிறது. அப்படி, முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று தான் வைட்டமின்கள்.

வைட்டமின்கள் முடியின் வேர்களுக்கு எரிபொருள் போன்றவை. அவை உச்சந்தலைக்கும் முடிக்கும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, முடியை வலுவாக வைத்து, முடி உதிர்வைக் குறைத்து, வளர்ச்சியை அதிகரிக்கும். அந்த வகையில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

 முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், உணவுகள் வரிசையில் பயோட்டின் முதலிடத்தில் உள்ளது. முடி, தோல் மற்றும் நகங்களை உருவாக்கும் புரதமான கெரட்டின் உற்பத்தி செய்ய பயோட்டின் உதவுகிறது. பயோட்டின் குறைபாடு உடையக்கூடிய முடிகள், முறிவு மற்றும் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

முட்டை, நட்ஸ், விதைகள், சால்மன் மீன் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளில் பயோட்டின் நல்லளவில் உள்ளது. உணவின் மூலம் போதுமான பயோட்டின் கிடைக்கவில்லை என்றால், பயோட்டின் சப்ளிமெண்ட்கள் முடிக்குத் தேவையான ஊக்கத்தை வழங்கும். பயோட்டின் சப்ளிமெண்ட்களை தொடர்ந்து சில மாதங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் வலுவான, பளபளப்பான முடியை பெறலாம்.

 வைட்டமின் D குறைபாடு பெரும்பாலும் முடி மெலிதல் மற்றும் அலோபீசியாவுடன் (alopecia) தொடர்புடையதாகும். இந்த வைட்டமின் புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவுகிறது. அதாவது, அடர்த்தியான, ஆரோக்கியமான வளர்ச்சியை விரும்பினால் வைட்டமின் டி அத்தியாவசியமானது. வைட்டமின் D அளவை அதிகரிக்க எளிதான வழி, வாரத்திற்கு சில முறை 15–20 நிமிடங்கள் சூரிய ஒளியில் செலவிடுவதுதான். மேலும், கொழுப்பு நிறைந்த மீன், காளான்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மூலமாகவும் இதைப் பெறலாம்.

பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை மற்றும் வெண்ணெய் (அவகாடோ) மூலம் உணவில் வைட்டமின் E-ஐச் சேர்ப்பது அவசியமாகும். வைட்டமின் E நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது முடியை உள்ளிருந்து பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

வைட்டமின் A: உடலில் உள்ள ஒவ்வொரு செல் வளர்வதற்கு வைட்டமின் A தேவைப்படுகிறது. இது சீபம் (Sebum) எனப்படும் இயற்கையான எண்ணெயை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது உச்சந்தலையை நீரேற்றத்துடன் வைத்து முடியைப் பளபளப்பாக்குகிறது. போதுமான வைட்டமின் A இல்லையென்றால், முடி பெரும்பாலும் உலர்ந்து, பலவீனமாகி, முறிவுக்கு ஆளாகிறது. கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கீரை, மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் வைட்டமின் A நிறைந்துள்ளது. இருப்பினும், வைட்டமின் ஏ மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் C: வைட்டமின் C, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் C உடலுக்கு கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. கொலாஜன் என்பது முடி அமைப்பை வலுப்படுத்தும் ஒரு புரதமாகும். மேலும், முடி உதிர்வதைத் தடுக்க மிகவும் அவசியமான இரும்பை உறிஞ்சவும் உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், கொய்யா, குடைமிளகாய் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் இருந்து போதுமான வைட்டமின் C கிடைக்கிறது. அதனால் முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி உணவுகளை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.