அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் உணவு கடை நடத்தி வந்தார். இவரது உணவகத்துக்கு வெளியே, திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது சண்டையை மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது, ராகேஷ் ஏகபன் சுட்டுக் கொல்லப்பட்டார்.