சாப்பிட்ட பின் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க! காரணத்தை தெரிஞ்சுக்கோங்க!
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு உட்கொள்வது மட்டும் போதாது. அதையும் தாண்டி பல விஷயங்கள் ஒன்றாக இணைந்து தான் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. அதில் முக்கியமாக, உணவுக்கு முன்னும் பின்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா? பெரும்பாலானோர் சத்தான உணவை உட்கொண்டாலும், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. இதன் விளைவாக, செரிமானம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், உணவுக்கு முன் மற்றும் பின் நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது பெரும் பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான சாறுகள் மற்றும் நொதிகளை நீர்த்துப்போகச் செய்து செரிமானத்தை மெதுவாக்கும். இது மோசமான செரிமானத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சும் திறனைத் தடுக்கும். எனவே, உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது உணவு உட்கொண்ட ஒரு மணி நேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்: எடையை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள், பழங்களை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். சிலர் உணவுக்கு முன் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு உட்கொள்வதை குறைத்து எடையை கட்டுக்குள் வைப்பார்கள். ஆனால், சிலர் பழங்களை உணவுக்கு பின் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது எல்ல. பழங்கள் விரைவாக ஜீரணமாகிவிடுவதால், உணவுக்குப் பிறகு அவற்றைச் சாப்பிடுவது புளிப்பு வாயு உற்பத்தியை ஏற்படுத்தும். இது சர்க்கரை அளவை அதிகரித்து செரிமானத்தையும் பாதிக்கும் என்கிறது NCBI ஆய்வு.
டீ குடிப்பதை தவிர்க்கவும்: நல்ல திருப்தியாக உட்கொண்ட பின் பலரும் டீ குடிக்க விரும்புவது இயல்பு தான். ஆனால், சாப்பிட உடனே டீ குடிப்பது அஜீரணத்தை ஏற்படுத்தும். டீயில் அதிக அமிலத்தன்மை உள்ளது. இது புரதங்களை ஜீரணிக்க கடினமாக்கலாம். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வேகமான நடை: சாப்பிடவுடன் நடத்தால் உடல் எடை கூடாது என நினைத்து பலரும் உணவுக்குப் பின் வேகமாக நடக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம் என்கிறது ஆய்வு. உணவுக்குப் பிறகு நடப்பது போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது செரிமானத்தை விரைவுபடுத்த உதவும். இருப்பினும், சாப்பிட்ட உடனே நடப்பது சிலருக்கு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உடலை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் மட்டும் நடப்பது நல்லது.
உடனடியாக குளிக்க வேண்டாம்: சாப்பிட்ட உடனேயே குளிப்பதால் செரிமானம், ரத்த ஓட்டம் செயல்முறையில் தலையிடலாம் மற்றும் செரிமானம் மெதுவாகலாம். குளிக்கும்போது உடல் வெப்பநிலை குறைந்து, இதை எதிர்த்துப் போராட ரத்த ஓட்டம் தோலுக்குத் திருப்பிவிடப்படுவதால் இது நிகழ்கிறது. எனவே, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்க்க, உணவுக்கு முன் அல்லது உணவுக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை குளிக்கவும்.
தூக்கக் கட்டுப்பாடு: சாப்பிட்ட உடனே தூங்குவது செரிமானத்தை மெதுவாக்கும். இது வீக்கம், அசௌகரியம் மற்றும் வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தும். உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் உணவு உட்கொள்ளலாம். அதே நேரத்தில் தூங்கும் போது இடது பக்கத்தில் தூங்க வேண்டும். இப்படி செய்வதால் செரிமானத்திற்கு உதவும் திரவங்கள் மேலே செல்வதைத் தடுக்க உதவும். இது நெஞ்செரிச்சல் அபாயத்தையும் குறைக்கிறது.