ஸ்குவாஷில் வேலவன், அனஹத் சாம்பியன்

ஸ்குவாஷில் வேலவன், அனஹத் சாம்பியன்

 ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டி சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வந்தது.

இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் எகிப்தின் ஆடம் ஹவாலை எதிர்த்து விளையாடினார். இதில் வேலவன் செந்தில் குமார் 11-7,11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றார்.