பேட்டிங் தரவரிசை: 4வது இடத்திற்கு முன்னேறினார் கோலி
ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 4வது இடத்திற்கு இந்திய அணி வீரர் விராட் கோலி முன்னேறியுள்ளார்.
தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் முதல் 2 போட்டிகளிலும் சதம் விளாசி விராட் கோலி அசத்தினார். இதையடுத்து தரவரிசை பட்டியலில் 5வது இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறி 4வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.