விவ் ரிச்சர்ட்ஸ், மேத்யூ ஹைடன் சாதனையை முறியடித்த மார்கோ ஜான்சன்!

விவ் ரிச்சர்ட்ஸ், மேத்யூ ஹைடன் சாதனையை முறியடித்த மார்கோ ஜான்சன்!

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை மார்கோ ஜான்சன் படைத்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது சேனுரன் முத்துசாமியின் சதம் மற்றும் மார்கோ ஜான்சனின் அரைசதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 484 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.

இதில் அதிகபட்சமாக சேனுரன் முத்துசாமி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், சதத்தை நெருங்கிய மார்கோ ஜான்சன் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 7 ரன்களுடனும், ராகுல் 2 ரன்களுடனும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில், இப்போட்டியில் மார்கோ ஜான்சன் 7 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 1974ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் 2001ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் ஆகியோர் தலா 6 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்சமயம் ஜான்சன் முறியடித்துள்ளார்.

இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் (ஒரு இன்னிங்ஸில்)

  • 7 - மார்கோ ஜான்சென், கௌகாத்தி, 2025
  • 6 - விவ் ரிச்சர்ட்ஸ், டெல்லி, 1974
  • 6 - மேத்யூ ஹேடன், கொல்கத்தா, 2001

இதுதவிர ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி 7 சிக்ஸர்களை அடித்திருந்த நிலையில், அதனை ஜான்சன் சமன் செய்துள்ளார்.

மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய தென்னாப்பிரிக்க வீரர் என்ற ஜாக் காலிஸ், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் சாதனைகளையும் ஜான்சன் முறியடித்துள்ளார். இதற்கு முன் ஜாக் காலிஸ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 5 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் (ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில்)

  • 7 - மார்கோ ஜான்சென், கௌகாத்தி, 2025
  • 5 - ஜாக் காலிஸ், செஞ்சுரியன், 2010
  • 5 - ஏபி டி வில்லியர்ஸ், செஞ்சுரியன், 2010
  • 4 - டீன் எல்கர், விசாகப்பட்டினம், 2019