உக்ரைன் போரில் 20 லட்சம் பேர் பலியா? ரஷ்யா சொன்னது இதுதான்
உக்ரைனுடனான போரில் 20 லட்சம் பேர் பலியானதாக வெளியான தகவலை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கி விரைவில் 4 ஆண்டுகள் ஆகவுள்ளது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்ட போதிலும் அதிகாரப்பூர்வமாக 2 நாடுகளும் எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ ஆராய்ச்சி அமைப்பு, 2 நாடுகளிலும் மொத்தம் 20 லட்சம் பேர் பலியாகி விட்டதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவில் மட்டும் 12 லட்சம் பேர் பலியாகி விட்டதாக கூறியுள்ளது.
இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை வட்டாரங்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், ஆதலால் அதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளன.