அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் ரூ.1,800 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அனில் அம்பானியின் நிறுவனங்கள் செய்த பணமோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது ரூ.1,800 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதையும் சேர்த்து இதுவரை அனில் அம்பானியின் ரூ.12,000 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.