தாமதமாக வந்த ரயில்! ரூ.9 லட்சம் அபராதம் செலுத்த ரயில்வேக்கு உத்தரவு
ரயில் தாமதமாக வந்ததால் மாணவி தேர்வு எழுத முடியாமல் போனதால், அவருக்கு ரூ.9 லட்சம் அபராதம் செலுத்தும்படி, ரயில்வேக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சம்ரிதி என்பவர் லக்னோக்கு ரயிலில் தேர்வு எழுதச் சென்றுள்ளார். ஆனால் லக்னோவுக்கு 11 மணிக்குச் செல்வதற்கு பதிலாக தாமதமாக மதியம் 1 மணிக்கு சென்றுள்ளது.
இதனால் தேர்வு மையத்திற்கு தாமதமாக சென்ற மாணவியை ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் கஸ்டப்பட்டு படித்தும், அந்த மாணவியால் தேர்வு எழுத முடியாமல் போனது.
இதையடுத்து மாணவியின் தந்தை பஸ்தியில் உள்ள நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். அப்போது ரயில் தாமதமாக வந்ததை ஒப்புக் கொண்ட இந்திய ரயில்வே, அதற்கு மழுப்பலான காரணத்தை தெரிவித்தது.
இதை ஏற்காத நுகர்வோர் தீர்ப்பாயம், மாணவி சம்ரிதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக அவருக்கு ரூ.9 லட்சம் அபராதம் அளிக்கும்படி ரயில்வேக்கு உத்தரவிட்டது.