இயற்கையாவே கல்லீரல் நோயை குணப்படுத்தும் உணவுகள்!

இயற்கையாவே கல்லீரல் நோயை குணப்படுத்தும் உணவுகள்!

கல்லீரலின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த முக்கியமான உறுப்பு நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் செரிமானம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver) அல்லது ஹெபடைடிஸ் போன்ற நிலைமைகள் காரணமாக ஏற்படும் கல்லீரல் அழற்சிக்கு (Inflammation), உரிய கவனம் கொடுக்காவிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், நமது அன்றாட உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்ப்பது கல்லீரல் அழற்சியைக் குறைக்கவும், அதன் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவும். அந்த வகையில், கல்லீரலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கொழுப்பு மீன்: சால்மன், கானாங்கெளுத்தி (Mackerel) மற்றும் மத்தி (Sardines) போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Anti-inflammatory properties) உள்ளன. இவை கல்லீரல் அழற்சியைக் குறைக்கவும், கொழுப்பு விவரங்களை (lipid profiles) மேம்படுத்தவும் உதவும். ஒமேகா-3கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதால், இவை உடலுக்கு இரட்டிப்பு நன்மையை அளிக்கின்றன.

கீரை வகைகள்: கீரை, காலே போன்ற கீரை வகைகள் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. இவற்றில் குளோரோஃபில் (Chlorophyll) உள்ளது, இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் அழற்சியைக் குறைக்கும். இந்த கீரைகளை கூட்டு, குழம்பு, பொரியல், சாலடுகள், ஸ்மூத்திகளுடன் சேர்த்து சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க எளிதான வழியாகும்.

ஆலிவ் எண்ணெய்: இது கல்லீரல் அழற்சியைக் குறைப்பது உட்பட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், கல்லீரல் கொழுப்பு அளவைக் குறைக்க உதவும். இதை சமைக்கவோ அல்லது சாலட் டிரஸ்ஸிங் ஆகவோ பயன்படுத்தலாம்.

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புச் சேர்மம் உள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குர்குமின் கல்லீரல் அழற்சியைக் குறைக்கவும், கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவும். உணவில் மஞ்சளைச் சேர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு அதை ஒரு சப்ளிமெண்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

பூண்டு: பூண்டில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சேர்மங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும். சமையலில் பூண்டைச் சேர்ப்பது சுவையைச் சேர்ப்பதுடன், கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

க்ரீன் டீ: இதில் கேடசின்கள் (Catechins) எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்றி நிறைந்துள்ளது. இது மேம்பட்ட கல்லீரல் செயல்பாடு மற்றும் குறைக்கப்பட்ட அழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பதால், கல்லீரல் நொதி அளவைக் (liver enzyme levels) குறைக்கவும், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை (fat metabolism) மேம்படுத்தவும் முடியும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.