ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் யூஸ் பண்றீங்களா? அப்போ பிரச்சனை நிச்சயம்!
இந்திய உணவுமுறையில் எண்ணெய்யின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. உணவுக்கு சரியான அமைப்பை கொடுப்பது முதல் சுவையை கூட்டுவது வரை எண்ணெய் மிக முக்கியமானது. பஜ்ஜி, வடை, பூரி, சிக்கன், மீன் வறுவலில் தொடங்கி பொரியல், கூட்டு வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ என எண்ணெய் பயன்படுத்தாத உணவுகளின் பட்டியல் மிக குறைவு தான்.
ஆனால் நாம் அனைவரும் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது. எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்தாலும், செலவைக் குறைக்கவும், வீணாவதைத் தடுக்கவும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பெரும்பாலான வீடுகள் மற்றும் உணவகங்களில் நடக்கும் வழக்கமான ஒரு நடைமுறையாக உள்ளது.
சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவதால் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், அதனை நச்சு கலவையாக மாற்றி, பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கும் சுகாதார சிக்கல்களுக்கும் வழிவகுக்கின்றன. அதற்காக, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை தூக்கி எறிவதா? என்றால் இல்லை.
அதற்கான சில வழிமுறைகளும், எந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாம்? என்ற வழிகாட்டுதல்களும் உள்ளன. அந்த வகையில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? பாதுகாப்பாக மீண்டும் எப்படி பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
நச்சு கலவைகள் உருவாக்கம்: எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடாக்கப்படும் போது, அதன் உள்ளே இருக்கும் ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) உடைந்து, டோட்டல் போலார் காம்பவுண்ட்ஸ் (Total Polar Compounds), ஆல்டிஹைடுகள், அக்ரோலின் போன்ற தீங்கு விளைவிக்கும் பல சேர்மங்களை உருவாக்குகின்றன என்கிறது 2025ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வு.

எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படும் போது TPC-யின் அளவு அதிகரிக்கிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின் படி, சமையல் எண்ணெய்யில் TPC அளவு 25% ஐ தாண்டினால், அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது இல்லை என்கிறது. எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் போது அதிலுள்ள நச்சுக்கலவைகள் ரத்த அழுத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
டிரான்ஸ் கொழுப்புகள் அதிகரிப்பு: எண்ணெய்யை அதிக வெப்ப நிலையில் மீண்டும் சூடாக்கும் போது, அதன் சில ஆரோக்கியமான கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறுகின்றன. இந்த டிரான்ஸ் கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோய் அபாயத்தை அதிகப்படுத்துகின்றன என்கிறது NCBI ஆய்வு.
ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாக்கம்: மீண்டும் சூடாக்கப்பட்ட எண்ணெய்யில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் அதிகமாக உருவாகின்றன. இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, உயிரணுக்களை சேதப்படுத்துகின்றன. இது நாள்பட்ட வீக்கம் (Inflammation), நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் புற்றுநோய் அபாயம் போன்றவற்றுக்கு காரணமாகும்.
உணவின் தரம் குறைதல்: பழைய எண்ணெய் உணவின் சுவை, மணம் மற்றும் அமைப்பை கெடுக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. பொரித்த உணவுகள் எண்ணெய்யை அதிகமாக உறிஞ்சி, பிசுபிசுப்புத் தன்மையுடனும், எண்ணெய் வாடையை அதிகரிக்கும்.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை எத்தனை முறை பயன்படுத்தலாம்?
எண்ணெய்யின் வகை, பொரிக்கும் வெப்பநிலை மற்றும் எந்த வகையான உணவு பொரிக்கப்பட்டது? போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. இருப்பினும், சுகாதார நிபுணர்கள் மற்றும் FSSAI-ன் வழிமுறை படி ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்த வகையான சமையல் எண்ணெய்யாக இருந்தாலும் அதிகபட்சமாக 2 முதல் 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் FSSAI பரிந்துரைக்கின்றன. இது வீடு மற்றும் உணவகங்களுக்கும் பொருந்தும். எண்ணெய்யில் பிசுபிசுப்பு, புளித்த வாசனை, அதிகமாக நுரைப்பது, மிகவும் கருமையாக இருந்தால் அதனை பயன்படுத்தக் கூடாது.
மீண்டும் பயன்படுத்த வழி உள்ளதா? செலவை குறைக்கவும், எண்ணெய் வீணாகுவதை தடுக்கவும் பலரும் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த நினைப்பதுண்டு. அப்படியிருக்க, அதற்கான சில வழிமுறைகள் இதோ...
எண்ணெய்யை ஒரு முறை பயன்படுத்தியதும் அதனை முழுமையாக ஆற வைத்து, அதில் படிந்திருக்கும் உணவுத் துகள்களை முற்றிலுமாக வடிகட்டவும். அந்த எண்ணெய்யை அப்படியே வைக்காமல், காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி வைக்கவும். அதிலும், மீன், சிக்கன் அல்லது காரமான உணவுகளை பொரிந்திருந்தால் அதனை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.