ஒரே நாளில் இருமுறை 'ஷாக்' கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,280 உயர்வு

ஒரே நாளில் இருமுறை 'ஷாக்' கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,280 உயர்வு

புத்தாண்டின் முதல் நாளில் குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை மாலை என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், 2026 புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை மளமளவென குறைந்து மக்களை சற்று ஆறுதல்படுத்தியது. இருந்த போதிலும், அடுத்த நாள் முதல் தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 22 காரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,00,800-க்கும், விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், இன்று (ஜன.5) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,01,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.13,833-க்கும், சவரனுக்கு ரூ.704 அதிகரித்து ரூ.110,664-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.8,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மாலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளதால், ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை, அதற்கு அடுத்த நாள் முதல் அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி சவரன் ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து இன்று ரூ.1,01,440 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மாலையிலும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரே நாளில் காலை மாலை என ரூ.1,280 அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,760 (மாலை)

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,01,440 (காலை)

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,02,080 (மாலை)

வெள்ளி 1 கிராம் - ரூ.265(காலை)

வெள்ளி 1 கிராம் - ரூ.266(மாலை)

வெள்ளி 1 கிலோ - ரூ.2,65,000(காலை)

வெள்ளி 1 கிலோ - ரூ.2,66,000(மாலை)

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதி கிராம் விலை (ரூ.) சவரன் விலை (ரூ.)
ஜனவரி 5 ரூ.12,760 ரூ.1,02,080
ஜனவரி 5 ரூ.12,680 ரூ.1,01,440
ஜனவரி 4 ரூ.12,600 ரூ.100,800
ஜனவரி 3 ரூ.12,600 ரூ.100,800
ஜனவரி 2 ரூ.12,580 ரூ.100,640
ஜனவரி 1 ரூ.12,440 ரூ.99,520
டிசம்பர் 31 ரூ.12,480 ரூ.99,840
டிசம்பர் 30 ரூ.12,600 ரூ.1,00,800
டிசம்பர் 29 ரூ.13,020 ரூ.104,160
டிசம்பர் 28 ரூ.13,100 ரூ.104,800
டிசம்பர் 27 ரூ.13,100 ரூ.104,800