புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக 2 முறை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர சில முக்கியமான உலகளாவிய காரணங்கள் உள்ளன. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, நேற்று (23.01.2026) காலை ரூ.3,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று (23.01.2026) மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (24.01.2026) ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,960க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,190க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.